Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் பலாத்காரம் - மரண தண்டனையே தீர்வு : வரலட்சுமி

14 ஏப், 2018 - 18:01 IST
எழுத்தின் அளவு:
Deathpenalty-is-solution-for-Rape-case-says-Varalashmi-Sarathkumar

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா, பாலியல் கொடுமைக்கு உள்ளாகி, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை பாலியல் கொடுமை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், அதற்கு மரண தண்டனையே ஒரே வழி, இதற்காக அனைவரும் போராட வேண்டும் என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...

காமுறும் பேய்கள்
நம் நாடும், மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் புத்தாண்டை கொண்டாட மனம் ஏற்கவில்லை. அரசியல்வாதிகள், பாலியல் குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா? உங்களை கெஞ்சி கேட்கிறேன், எதிர்த்து நில்லுங்கள், கேள்வி கேளுங்கள், உங்களால் முடிந்த எதையாவது செய்யுங்கள்.

மரண தண்டனை
ஒரு குழந்தை உயிரின் மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா?, நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். பாலியல் பலாத்காரத்திற்கு ஒரே தீர்வு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மட்டுமே. இதை சட்டம் இயற்ற போராடுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி கெஞ்சி அழைக்கிறேன். பாலியல் பலாத்காரம் என்பது சகித்து கொண்டு செல்லும் விஷயமில்லை.

காலம் தாழ்த்தி விட்டோம்
இது நம் பிரச்னை இல்லை என்று நாம் ஒதுங்க கூடாது. இந்த ஆத்திரத்தையும், வலியையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிதத்தன்மை உடையவர்களாக இருந்தாலே போதும். ஏற்கனவே நாம் காலம் தாழ்த்தி விட்டோம்.

கோழையாக இருக்காதீர்கள்
இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும். நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட சொல்லவில்லை. சமூகவலைதளம் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள், கோழையாக இருக்காதீர்கள்.

அமைதி காக்கும் நேரமல்ல
கடுமையான தண்டனை இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்கும் முன் ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை டுவிட்டரில் பின்தொடரும் 8 லட்சம் பேருக்கும் இத்தகவலை பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல, பாலியல் பலாத்காரத்திற்கு மரணதண்டனை கொடு.... எங்களுக்கு நீதி வேண்டும்.

நான் பாதுகாப்பாக உணரவில்லை
நான் வரலட்சுமி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை. கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்க கூடாது.

ஜெய்ஹிந்த்!

இவ்வாறு வரலட்சுமி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
'யு டர்ன்' படப்பிடிப்பில் இணைந்த பூமிகா'யு டர்ன்' படப்பிடிப்பில் இணைந்த ... விஜய்யின் அடுத்த பட இயக்குநர் மோகன்ராஜா? விஜய்யின் அடுத்த பட இயக்குநர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

christ - chennai,இந்தியா
15 ஏப், 2018 - 14:13 Report Abuse
christ முதல்ல சினிமாவுல நடிக்கிற பொம்பளைங்களை நல்ல மூடிக்கிட்டு நடிக்க சொல்லுங்க ,பணம் கிடைக்கிறது என்பதற்காக உடம்பைக்காட்டி கவர்ச்சியா நடிக்க வேண்டியது. இதனால் கவரப்படும் ஆண்கள் தங்களின் இச்சய அப்பாவி பெண்கள் மீது குழந்தைகள் மீது காட்டுகின்றனர் .முதல்ல உங்க சினிமாவை சீர்படுத்துங்க இங்க வந்து நல்லவ மாதிரி வசனம் எல்லாம் அப்புறம் பேசுங்க .
Rate this:
mscdocument - chennai ,இந்தியா
15 ஏப், 2018 - 13:32 Report Abuse
mscdocument அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதற்கான தூண்டுகோலாக இருக்கின்ற ஒவ்வொரு வாயில்களையும் அடைக்க வேண்டும்.
Rate this:
govindraraj - Bangalore,இந்தியா
15 ஏப், 2018 - 13:30 Report Abuse
govindraraj You should talk to politicians who talk against death penalty and human rights violation only supporting culprit who indulge in inhuman acts like raping and ing a child. Particularly politicians in TN.
Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
15 ஏப், 2018 - 13:08 Report Abuse
Mohamed Ilyas வாசகர்கள் இஸ்லாம் வலியுறுத்தும் அறவுரைகளை தெரிந்தோ தெரியாமலோ தங்கள் ஆழ் மனதில் இருந்து இயற்கையாக வெளிப்படுத்துகிறார்கள்
Rate this:
Sivakumar Natarajan - Muscat,ஓமன்
15 ஏப், 2018 - 13:04 Report Abuse
Sivakumar Natarajan ஆம் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். இதுவே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். கேவலமான ஜென்மங்கள் ...வாழ தகுதியற்றவர்கள்..
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in