ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் இயக்கும் படங்களை தயாரித்து வரும் பாலா, ஏற்கனவே சில படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்தார். தற்போது, லென்ஸ் பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.
'லென்ஸ்' திரைப்படம் ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது. அந்தப்படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் வாங்கி வெளியிட்டார்.
இந்நிலையில் அடுத்தப்படத்தின் திரைக்கதையை எழுதி முடித்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், பாலாவிடம் கதை சொல்லி இருக்கிறார். கதையைக் கேட்ட இயக்குநர் பாலா தனது 'பி ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
விரைவில் தொடங்கப்பட உள்ள இப்படம் குறித்தும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பும் வெளியாக இருக்கிறது.