Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவிரி பிரச்னை : தமிழனாய் ஆர்ஜே.பாலாஜி செய்த காரியமும், அட்டகாசமான பதிலும்...!

11 ஏப், 2018 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Cauvery-Issue-:-RJ-Balajis-super-reply

ரேடியோ ஜாக்கி, சின்னத்திரை தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் நடிகர் ஆர்ஜே.பாலாஜி. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலின் வர்ணனையாளராகவும் இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கவனம் ஈர்க்கும் விதமாக நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டை புறக்கணிக்கும் போராட்டம் நடந்தது. தமிழரான ஆர்ஜே.பாலாஜி அந்த போட்டியை வர்ணனை செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஆர்ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், ஐபிஎல் போட்டியில் நான் செய்ய வேண்டிய வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக என் பங்களிப்பு இது. இந்த முடிவை நான் சார்ந்திருக்கும் நிர்வாகத்திற்கு சொல்லும்போது என் உணர்வுக்கும், என் மக்கள் உணர்வுக்கும் மதிப்பளித்தனர், நன்றி.

இந்த நேரத்தில் சில விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். ஐபிஎல் போட்டியை நாம் பார்க்கக்கூடாது என்று கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னார்கள். பிறகு, மைதானத்தில் பார்க்க வேண்டாம், டிவியில் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு ஐபில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட வேண்டும் என்றார்கள். இப்போது ஐபிஎல் போட்டியே நடக்கக் கூடாது என்கிறார்கள்.

போட்டி நடக்கிறதோ, இல்லையோ என்னை மாதிரி ஆட்கள் அதில் வேலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இது எல்லாமே எதற்கு என்றால் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் என்கிறார்கள். இது சரியா என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், இப்போதிருக்கும் நிலைமை பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரியாதா? அப்படியே கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றாலும் 234 எம்.எல்.ஏக்களையும், 40 எம்.பி.க்களையும் ஓட்டு போட்டு அனுப்பி வைத்திருக்கிறோம். அதனால், நாட்டின் மொத்த கவனத்தையும் பெற வேண்டுமென்றால் அவர்கள் ராஜினாமா செய்யலாம். ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று திரும்பிப் பார்ப்பார்கள்.

உடனே தேர்தல் அறிவிப்பார்கள் என்றால், அந்தத் தேர்தலில் யாரும் நிற்காதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால் அது சரியாக இருக்கு. ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்குத்தான். தோனிக்குக் கிடையாது.

நான் தனி மனிதனாகவும், என் நண்பர்களுடன் இணைந்தும் திருநெல்வேலி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 ஏரி, குளங்களைத் தூர் வாரி இருக்கிறோம்.

சிலர் ஆதாயத்துக்காக இதைப் பெரிதாக்குகிறார்கள். அதற்காக இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்து கொண்டு தீர்வை நோக்கிப் போராட வேண்டும்.

இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (71) கருத்தைப் பதிவு செய்ய
புதுப் படங்கள் இல்லாத தமிழ்ப் புத்தாண்டுபுதுப் படங்கள் இல்லாத தமிழ்ப் ... அரசியலில் ரஜினி : லதா ரஜினி சிறப்பு யாகம் அரசியலில் ரஜினி : லதா ரஜினி சிறப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (71)

Jaya Ram - madurai,இந்தியா
17 ஏப், 2018 - 15:13 Report Abuse
Jaya Ram நீங்கள் சொல்லும் கருத்தினை ஏற்கிறேன் ஆனால் இது நடைமுறைக்கு ஒவ்வாதது இதுவரை நடந்த பிரச்சினைகளில் யாராவது திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ( வாழப்படியார் தவிர்த்து ) போன்றவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா என்றால் இல்லை ஏனென்றால் அவர்கள் எல்லோரும் பதவி சுகம் அனுபவிப்பவர்கள் , அவ்வளவு ஏன் இப்போ நடைபாதை போகும் ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவருக்கு சொந்தமான டிவி சான்னேல்களும், அவரது உறவினர் முன்னாள் மந்திரியின் சானல்களை காவேரி வாரியம் அமைக்கும்வரை இயங்காது என அறிவிக்க சொல்லுங்கள் பார்ப்போம், அவர்களின் சானல்களில் டாஸ்மாக் கதையினை மக்கள் அடித்து நொறுக்கினர் என்று செய்தி வரும் ஆனால் அவர்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மதுபான ஆலைகளை அடைக்க சொல்லி உத்தரவு போடச்சொல்லுங்கள் பார்ப்போம் வாய்ச்சொல் வீரர்களை இப்போ உங்களை ஐபிஎல் வேண்டாம் என்பது இந்த நாட்டில் உள்ள இளைஞர்களை நம் நிலைமைமையினை தெரிந்துக்கொள்ளத்தான் ஏனென்றால் அரசுகளின் அடிமைகளாக இந்த அணைத்து ஊடகங்களும் செயல்படுகின்றன வடஇந்திய நாளிதழ்களில் நமது தமிழ் நாட்டின் பிரச்சினைகள் எதுவும் வருவதில்லை இப்படி இளைஞர் ஆர்வமுள்ள விளையாட்டினை முடக்கினால் எல்லாமாநில இளைஞர்களுக்கும் நம் நிலைமை தெரியவரும் எனவே அதற்காகத்தான் இந்த புறக்கணிப்பு, நாம் ஒன்றும் உலககோப்பையினை புறக்கணிக்கவில்லையே, இது விளம்பத்தாரர்கள்,மற்றும் கிரிக்கெட் வாரியம் நடத்தும் நிகழ்ச்சிதானே எனவே இதனை புறக்கணிப்பதில் தவறில்லை என்பதே எனது கருத்து மேலும் நீங்கள் கூறியதுபோல வரும் எம்பி தேர்தலினை புறக்கணிக்க இப்போதிருத்தே குரல் கொடுக்க நாங்கள் தயார்
Rate this:
Janaki Srinivasan Iyer - Chennai,இந்தியா
12 ஏப், 2018 - 13:01 Report Abuse
Janaki Srinivasan Iyer MY QUESTION IS TO WHOM DOES SUNRISERS BELONG TO? WHY DID UDHAYANIDHI STALIN & FAMILY GO TO SEE THE MATCH? WHEN CONGRESS & DMK ARE PARTNERS IN POLITICS, WHY THEY CAN'T THEY COMMND KARNATAKA FOR WATER. DRASTIC CHANGE IN POLITICAL FRONT IS THE NEED OF THE HOUR.
Rate this:
Varipuli - VaigaiCity,இந்தியா
12 ஏப், 2018 - 12:55 Report Abuse
Varipuli ஆக்கபூர்வமா , கையில் ஒரு மண்வெட்டியும் , கடப்பாரையும் எடுத்துக்கொண்டு ஏறி , குளம் தூர்வாரலாமே , அதை விட்டு போராட்டம் தேவையா? மனம் இருந்தால் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் , மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினையுங்கள்
Rate this:
Ganesh - chennai,இந்தியா
12 ஏப், 2018 - 12:48 Report Abuse
Ganesh Very nice Balaji. U did your work, then u point ur fingers @ politicians. The politicians just do these stunts for their selfishness. Finally our CKS players are those who will miss the local support. If they win cup despite this, it would be amazing. it would be a big blow for the politicians.
Rate this:
NSRamesh - Chennai,இந்தியா
12 ஏப், 2018 - 12:21 Report Abuse
NSRamesh காவேரி நீரை பெற்றுத்தர சென்னையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவரும் வீதிக்கு வந்து போராடுவது உண்மையில் நாம் அனைவரும் தமிழன் என்ற ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது இவ்வளவு போராட்டத்திற்கும் பிறகு வெற்றி இல்லையேல் அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்தையும் புரட்டி போடுங்கள். ஏன் ஆர் ஜி பாலாஜி சம்பளத்தை பற்றி பேசணும் அவரது இந்த செயலும் போற்ற தக்க பங்களிப்பு தான்
Rate this:
மேலும் 66 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in