அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் மெர்குரி. படம் முழுக்க வசனமே பேசாமல் நடித்துள்ளார் பிரபுதேவா. இந்த திரில்லர் படத்தை ஏப்ரல் 13-ந்தேதி வெளியிடப்போவதாக சமீபத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் கார்த்திக் சுப்புராஜ். அதன்பிறகு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து அந்த திட்டத்தை மாற்றி விட்டார்.
மேலும், மெர்குரி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், நான் சின்ன வயதாக இருந்தபோது கமல் சார் நடித்த பேசும் படம் என்ற படத்தை பார்த்து இம்ப்ரஸாகியிருந்தேன். அதனால்தான் அந்த மாதிரி ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டேன். அதில் உருவானதுதான் இந்த மெர்குரி படம்.
இந்த படத்தில் பிரபுதேவா முதன்முறையாக நெகடீவ் ரோலில் நடித்துள்ளார். ரசாயனத்தின் எதிர்வினைகளை சொல்லும் இந்த படத்தில் பிரபுதேவாவை இப்படியொரு ரோலில் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அப்படியொரு அதிர்ச்சி தரும் பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறார் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.