ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல கன்னட நடிகர் சுதீப். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் அறிமுகமானவர். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்கள் உள்ள நிலையில் நேற்று சுதீப், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முன்னணி நடிகர்களை அணுகி வரும் இந்த நேரத்தில் சுதீப், சித்தராமையா சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர்களின் சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்தது என்றும், அதில் வருகிற தேர்தல் குறித்தும், கர்நாடக மாநில தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுதீப் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இதில் அரசியல் எதுவும் இல்லை. என்கிறது சுதீப் தரப்பு.