பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் காயத்ரி கிருஷ்ணன். அந்தப் படத்தில் அரசுக்கு எதிராக போராடும் போராளி பெண்ணாக நடித்திருந்தார். இதுதவிர பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதி தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் காயத்ரிதான் ஹீரோயின். இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
காயத்ரி கிருஷ்ணனுக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த சினிமா ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. கடந்த 2ம் தேதி இருவருக்கும் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு திருமணம் நடக்க இருக்கிறது.
"இது காதல் திருமணம் தான் ஆனால் பெற்றோர்கள் சம்மத்துடன் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன். அவர் ஒளிப்பதிவு பணியை தொடர்வார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" என்கிறார் காயத்ரி கிருஷ்ணன்.