மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
திலீப் நடிப்பில் ரதீஷ் அம்பாட் என்பவர் டைரக்சனில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் தான் 'கம்மார சம்பவம்'. மூன்றுவித காலகட்டங்களில் ஒரு பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் சித்தார்த் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில் மொத்தப்படமும் 3 மணி 2 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாக்கி இருக்கிறதாம்.
கடந்த பல வருடங்களில் 3 மணி நேரம் ஓடும் அளவில் வெளியான படங்கள் மிகவும் சொற்பமே.. விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் திலீப் படங்கள் இவ்வளவு நேரம் ஓடும் விதமாக இதுவரை உருவானதும் இல்லையாம். இதற்குமுன் வெளியான திலீப்பின் 'ராம்லீலா' படம் தந்த வெற்றியும் உற்சாகமும் தான் ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் 3 மணி நேர படமாக இதை வெளியிட தூண்டியுள்ளதாம்.