கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படம் 'படைவீரன்'. சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்றாலும் கதாநாயகியான அம்ரிதாவுக்கு நல்ல பெயரைத் தேடி கொடுத்தது.
படைவீரன் படத்திற்கு முன் சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருந்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான் அவரை அழைத்து காளி படத்தின் கதாநாயகி வாய்ப்பு வழங்கினாராம் விஜய் ஆண்டனி.
விரைவில் வெளிவரவிருக்கும் 'காளி' படம் தன் சினிமா பயணத்தை வேகப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் அம்ரிதா. அது மட்டுமல்ல, காளி படத்தின் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி என்னிடம் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார் என்கிறார் அம்ரிதா.
'காளி' படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ஒரு பெண் இயக்குநர் என்பதால் படத்தில் வேலை பார்த்தபோது பாதுகாப்பாக இருந்ததாகவும் சொல்கிறார். சிம்ரன், திரிஷா இருவரும் அம்ரிதாவுக்கு ரோல் மாடல்களாம்.