மிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்? | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |
தென்னிந்தியத் திரையுலகத்தில் விஜய், அஜித், பவன் கல்யாண், மகேஷ் பாபு, ராம்சரண் ஆகியோரது படங்களின் முதல் நாள் வசூல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவரவர் ரசிகர்களின் மிகப் பெரும் ஆர்வமாக இருக்கிறது. மேலே, குறிப்பிட்டுள்ள நடிகர்கள் தான் இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களிலும், யு டியூப் சாதனைகளிலும் போட்டி போட்டு சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகேஷ் பாபு நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'ஸ்பைடர்' படம் படுதோல்வியடைந்த்து. பவன் கல்யாண் நடித்து கடைசியாக வெளிவந்த 'அஞ்ஞாதவாசி' படமும் பெரும் தோல்வியடைந்தது. இதனால் ராம்சரண் நடித்து நேற்று வெளிவந்த 'ரங்கஸ்தலம்' படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. நல்ல வேளையாக படத்தின் நீளத்தைத் தவிர்த்து படத்தை யாரும் பெரிய குறையாகச் சொல்லவில்லை. அதனால், படம் முதல் நாளிலேயே நல்ல வசூலைக் கொடுத்துள்ளது.
முதல் நாளில் மட்டும் இப்படம் சுமார் 43 கோடிகளை வசூலித்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் 'மெர்சல்' படத்தின் வசூலை இந்தப் படம் மிஞ்சவில்லை என்பது விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் தகவல். 'பாகுபலி' அல்லாத படங்களின் முதல் நாள் வசூலில் இன்னமும் 'கபாலி' தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது ரஜினி ரசிகர்களுக்கான கூடுதல் தகவல்.