விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பிரபல டப்பிங் கலைஞர்கள் ஸ்ரீஜா, ரவி. இவர்களின் மகள் ரவீணா இவரும் டப்பிங் கலைஞர்தான். த்ரிஷா, நயன்தரா, ஹன்சிகா ஆகியோருக்கு குரல் கொடுத்து வந்தார். ரவீணாவுக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. தீவிர தேடுதலுக்கு பிறகு ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் விதார்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படத்தில் ரவீணாவின் நடிப்பு பேசப்பட்டாலும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாய்ப்புக்காக காத்திருந்த ரவீணா, தற்போது மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அறிமுக இயக்குனர் பினுராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் ஜோடியாக நடிக்கிறார். கேரளாவில் படப்பிடிப்புகள் நடந்த வருகிறது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிகைகள் வரும் நேரத்தில், தமிழில் இருந்து மலையாளத்திற்கு சென்றிருக்கிறார் ரவீணா.