மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாளத்தில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீசாக மம்முட்டி நடித்த 'மாஸ்டர்பீஸ்'' படம் வெளியானது. சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படும் இந்தப்படம் தமிழிலும் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட இருப்பதாக கடந்த மாதம் ஒரு அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்தப்படம் தமிழில் 'சாணக்யன்' என்கிற பெயரில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மம்முட்டி தவிர வரலட்சுமி, மஹிமா நம்பியார், பூனம் பஜ்வா, பாகமதி ஹீரோ உன்னிமுகுந்தன் என தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் இதில் நிறைய உள்ளனர்.
அதுமட்டுமல்ல இந்தப்படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் என்பதால் ரசிகர்களை எளிதில் கவரும் என்பதும் இந்தப்படத்தை தமிழில் வெளியிட காரணம். இதில் மம்முட்டி போக்கிரி விஜய் பாணியிலான கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.