கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
புதிய அரசியல் கட்சி, ரசிகர்களை அமைப்பு ரீதியாக திரட்டுதல், மத்திய மாநில அரசுக்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்தல் என்று அரசியல்வாதி கமல் பிசியாக இருந்தாலும், சத்தமே இல்லாமல் நடிகர் கமலும் பிசியாக இருக்கிறார்.
விரைவில் அவர் நடிக்க இருக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் தந்தை, மகன் என்ற இரு வேடத்தில் நடிக்கிறார். இதில் மகன் வேடம் நடுத்தர வயதுடைய நல்ல உடல்வாகு கொண்ட கேரக்டர். இதற்காக கடந்த சில நாட்களாக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கமல். அவருடன் மகள் அக்ஷராவும் அவருடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஜிம்மில் மகள் செல்பி எடுக்க அதையே அவர் படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் கமல். அதோடு "என் குழந்தை உடற்பயிற்சி செய்கிறது. உடற்பயிற்சியால் மூளை சுறுசுறுப்படையும், வலுவான உடல் வலுவான சிந்தனைக்கு உதவும்" என்றும் டுவிட் செய்திருக்கிறார்.