ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஜூலி. சில பிரச்னைகள் காரணமாக அரை இறுதிச் சுற்றோடு வெளியேறிவர் அதன் பிறகு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டில் ஆனவர், சிறிய இடைவெளிக்கு பிறகு அபூர்வ ராகங்கள் தொடரில் வில்லியாக நடிக்க ஆரம்பித்தார். அந்த தொடர் 50 எபிசோட்களை கடந்த நிலையில் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். வேறொரு சேனல் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தொடர் ஒளிபரப்பான சேனலின் வற்புறுத்தலின் பேரில் விலக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு அதே அபூர்வ ராகங்கள் சீரியலில், அதே வில்லி கேரக்டரில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவைகள் நல்லவையாக இருக்கட்டும் என்கிற முடிவோடு நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜூலி. தற்போது பிக்பாஸ் ஜூலியும் நடிக்க வந்திருப்பதால் தேவையில்லாத பெயர் குழப்பத்தை தவிர்க்க தனது இயற்பெயரான விஷாலாட்சி என்ற பெயரில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜூலி.