அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 16ம் தேதி முதல் படப்பிடிப்பும், போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகளும் நடக்கக் கூடாதென தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடப்பதாகக் கூறி சர்ச்சை எழுந்தது. அதன்பின், தயாரிப்பாளர் சங்கம் நான்கு படங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
இதனிடையே, ஐதராபாத்தில் அஜித் நாயகனாக நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது என்று ஐதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரித்தததில் 23ம் தேதி வரை தயாரிப்பாளர் சங்கம் படப்பிடிப்பு சம்பந்தமான செட் வேலைகளைச் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது என்கிறார்கள்.