'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாரதிராஜா, பாலச்சந்தர் இணைந்து நடித்த ரெட்டைச்சுழி படத்தை இயக்கியவர் எழுத்தாளர் தாமிரா. அவர் தற்போது இயக்கி வரும் படம் ஆண் தேவதை.
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீனும், ஷேக்தாவூதும் தயாரிக்க, சைல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டியும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள். ஒரு லட்சத்து முப்பதாயிரம் பார்வையாளர்களைக் கடந்து கொண்டிருக்கிறது டிரைலர்.