இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹாலிவுட் படங்களை காப்பியடித்து சிலர் தமிழில் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாலிவுட்டிலோ ஹாலிவுட் படங்களின் கதையை முறைப்படி அனுமதி வாங்கி படம் எடுக்கின்றனர். லேட்டஸ்டாக 'The Fault in our Stars' என்ற ஹாலிவுட் படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. புற்றுநோய் பாதித்த காதலன் - காதலி பற்றிய கதை அம்சம் கொண்ட படம் இது. இப்படத்தில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறதாம். எனவே இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
முகேஷ் சப்ரா என்ற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்குகிறார். 'M.S.Dhoni' ஹிந்தி படத்தில் கதையின் கதாநாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ரஜ்புட் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
ஷங்கரின் '2.0', மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்', ராஜீவ் மேனனின் 'சர்வம் தாளமயம்', விஜய்-62, சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.