தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. ஏப்ரல் 27-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ரஜினியுடன் நானா படேகர், சமுத்திரகனி, ஹூமா குரோஷி, ஈஸ்வரிராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.
மேலும், கபாலி படத்திற்கு காஸ்டியூம் டிசைனராக இருந்த அனுவர்தனே இந்த காலா படத்திற்கும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். காலா ரஜினிக்காக ஆடை உருவாக்கியது பற்றி அவர் கூறும்போது, இந்த படத்தில் ரஜினி பிளாக் குர்தா உடைகள் மற்றும் லுங்கி அணிந்து நடித்துள்ளார். இந்த உடைகள் காட்டன் துணியில் உருவாகியுள்ளது. அதில் எம்ராய்டரிங் ஒர்க் செய்திருக்கிறோம்.
அதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் உடற்பயிற்சி மூலம் தனது உடல் கட்டை பக்காவாக மாற்றியிருந்தார். அது அவருக்கான உடைகள் ரெடி பண்ணுவதற்கு உதவியாக இருந்தது. அதோடு, காலா காஸ்டியூமில் ரஜினி செட்டில் எப்போதுமே எனர்ஜியுடன் காணப்பட்டார். அது அந்த ஆடைக்கு இன்னும் பெருமை சேர்ப்பதாக இருந்தது என்கிறார் அனுவர்தன்.