பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை: டாஸ்மாக்குக்கு நான் ஆதரவு என ஊடகங்களில் வந்தது தவறு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது:
@start@
ஊடக நண்பரே!
டாஸ்மாக்குக்கு
(TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க.
இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்😊
— Kamal Haasan (@ikamalhaasan) March 5, 2018
@end@
முன்னதாக வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடரில், நடிகர் கமல் மதுவிலக்கு குறித்து விமர்சித்திருந்தார்.
அதில் அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது; அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் பல நடக்கும். மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது; இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதைக் குறைக்கலாம்; ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. பெண்களின் ஓட்டுகளை வாங்க பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள். எனத் தெரிவித்திருந்தார்.