ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
விஜய் பட வில்லன்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். ஹீரோவுக்கு நிகரான பங்கு அவர் படங்களில் வில்லனுக்கும் இருக்கும். அந்த வகையில் தெறி படத்தில் இயக்குனர் மகேந்திரனை வில்லன் ஆக்கிய அட்லி, மெர்சல் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை வில்லன் ஆக்கினார். இப்போது விஜய்யின் பெயரிப்படாத 62வது படத்தில், அரசியல்வாதி பழ.கருப்பையாவை வில்லன் ஆக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
விவசாய பிரச்னைகளை முன்நிறுத்தும் படம் இது. இதில் பழ.கருப்பையா நிலச்சுவான்தாராகவும், அரசியல்வாதியாகவுமே நடிப்பதாக சொல்கிறார்கள். பழ.கருப்பையா எல்லா கட்சிகளிலும் அங்கம் வகித்தவர். ஒரு கட்டத்தில் அந்த கட்சியையே எதிர்த்து பேசி வெளியே வந்துவிடுகிறவர். நடிப்பும் அவருக்கு புதிதில்லை. அங்காடி தெரு படத்தில் ரெங்கநாதன் தெருவில் கடை நடத்தும் அண்ணாச்சியாக நடித்திருக்கிறார். இப்போது விஜய்க்கு வில்லன் ஆகியிருக்கிறார்.