Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேதனையில் வாழ்ந்த ஸ்ரீதேவி : ராம்கோபால் வர்மா

28 பிப், 2018 - 17:10 IST
எழுத்தின் அளவு:
Sridevi-did-not-live-happy-in-her-life-says-Ram-Gopal-Varma

நடிகை ஸ்ரீதேவியின் மிகத் தீவிரமான ரசிகர் ராம்கோபால் வர்மா. ஸ்ரீதேவி மறைந்த நாளிலிருந்தே தொடர்ந்து டிவீட்டுகளைப் பதிவிட்டு அவருடைய வருத்தத்தைத் தெரிவித்து வந்தார். நேற்று ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கென உருக்கமான ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அதில், “சில பெயர்களை இதில் குறிப்பிட்டிருப்பதால் இதை வெளியிடலாமா என எனக்குள்ளேயே விவாதித்தேன். இருந்தாலும் ஸ்ரீதேவி மற்றவர்களை விட அவருடைய ரசிகர்களுக்குச் சொந்தமானவர், அதனால் அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளத் தகுதியுடையவர்கள்.

ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு என்னுடைய காதல் கடிதம் - ராம்கோபால் வர்மா

“பல லட்சம் மக்கள் போலவே, மிக அழகான பெண் ஸ்ரீதேவி என நம்புகிறவன் நான். 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலகத்தை ஆட்டிப் படைத்தவர். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு பெரும்பாலானோர் RIP என்பதுடன் அவர்களது நினைவுகளை முடித்துக் கொள்வார்கள். ஆனால், எனக்கு அப்படியில்லை.

அவருடன் க்ஷன ஷனம், கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களில் நெருக்கமாகப் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. வெளி உலகத்தில் ஒரு பிரபலத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்களோ, அதற்கு நேர்மாறாக அவருடைய நிஜ வாழ்க்கை இருந்தது. பலருக்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை நேர்த்தியாக இருந்ததாகவே தெரிந்தது. ஆனால், அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாரா ?.

அவரைச் சந்தித்ததில் இருந்து அவருடைய வாழ்க்கையைப் பற்றி நான் அறிவேன். அவருடைய அப்பா மறையும் வரை அவர் வானத்தில் சிறகடித்துப் பறந்த பறவையாக இருந்ததை எனது கண்களால் பார்த்திருக்கிறேன். அதன் பின் மிகவும் கட்டுப்பாடான அம்மாவால் அவர் கூண்டுக்குள் அடைபட்ட பறவை ஆனார்.

அந்தக் காலத்தில் நடிகர்கள், நடிகைகளுக்கு கருப்புப் பணம்தான் சம்பளமாக வழங்கப்படும். ஆனால், அவரது அப்பா மறைந்த பின் அவருடைய அப்பா நம்பிக்கை வைத்திருந்த நண்பர்கள், உறவினர்களால் ஸ்ரீதேவி ஏமாற்றப்பட்டார். மேலும் பொறுப்பற்ற அம்மாவால் அவர் தவறான பிரச்சனைக்குரிய சொத்துக்களை வாங்கி ஏமாற்றப்பட்டார்கள். போனி கபூர் அவருடைய வாழ்க்கையில் நுழையும் சமயத்தில் ஸ்ரீதேவி பணமே இல்லாத ஒரு நடிகையாக இருந்தார்.

போனியும் அப்போது கடனாளியாக இருந்தார், அதனால் ஸ்ரீதேவியின் அழுகைக்கு அவரால் தோள் கொடுக்க முடிந்தது. தவறான அறுவை சிகிச்சையால் ஸ்ரீதேவியின் அம்மா அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா, பக்கத்து வீட்டுக்காரரின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவியின் அம்மா அனைத்து சொத்துக்களையும் ஸ்ரீதேவியின் பெயரில் எழுதிவிட்டார். இதனால், ஸ்ரீலதா அவருடைய அம்மா சுயநினைவில்லாமல் ஸ்ரீதேவியின் பெயரில் அனைத்து சொத்துக்களையும் எழுதிவிட்டார் என வழக்கு தொடர்ந்தார். அதனால் போனியைத் தவிர அவருக்கு வேறு எந்த ஆதரவும் இந்த உலகத்தில் இல்லாமல் இருநதது.

போனியின் அம்மா, ஸ்ரீதேவிதான் அவர்களது குடும்பத்தைப் பிரித்தார் என்று குற்றம் சாட்டி, ஸ்ரீதேவியை பொதுவெளியில் நட்சத்திர ஹோட்டல் வரவேற்பறையில் வயிற்றில் குத்தினார். மீண்டும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடிக்க வரும் வரை மகிழ்ச்சியற்ற பெண்ணாகவே இருந்தார். எதிர்கால பயம், மோசமான திருப்பங்கள் அவருடைய வாழ்க்கையில் அவருடைய அமைதியைக் குலைத்தது.

மிகவும் அழகான பெண்ணாகவே பலருக்கு ஸ்ரீதேவி இருந்தார். அவருக்குள்ளும் அது இருந்தது. மற்றவர்களைப் போலவே வயது அவருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. அவர் செய்து கொண்ட சில அறுவை சிகிச்சைகளைத் தெளிவாகப் பார்க்கலாம். அவர் தொடர்ந்து மற்றவர்களால் தான் வழி நடத்தப்பட்டு வந்தார். பெற்றோர்கள், உறவினர்கள், கணவர், குழந்தைகள் என அது தொடர்ந்தது.

உண்மையில் ஒரு பெண்ணின் உடலுக்குள் இருந்த குழந்தை தான் ஸ்ரீதேவி. பொதுவாக யார் இறந்தாலும் நான் ரெஸ்ட் இன் பீஸ் என சொல்ல மாட்டேன். ஆனால், ஸ்ரீதேவியியைப் பொறுத்தவரையில் அதை நான் சொல்ல விருப்பப்பட்டேன். கடைசியாக அவருடைய மரணத்தால், உண்மையிலேயே அவருக்கு அவருடைய வாழ்க்கையில் ஒரு அமைதி கிடைக்கட்டும் என நம்பினேன்.

என்னுடைய சொந்த அனுபவத்தில், ஆக்ஷ்ன், கட் என காமிராவுக்கு முன்னால் மட்டும் அவரை அமைதியாகப் பார்த்தேன். அவருடைய நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டித்து அவருடைய கற்பனை உலகிற்கு வந்துவிடுவார். அவருக்கு வலியைக் கொடுத்த வாழ்க்கையிலிருந்து விலகி நீண்ட தூரம் சென்று விட்டார். அதனால்தான் அவர் இனி அமைதியாக இருப்பார் என்கிறேன்.

RIP ஸ்ரீதேவி, ஆனால், இதைச் செய்வதற்காக இந்த உலகம் அமைதியாக இருக்காது என்று உறுதியளிக்கிறேன்.

நாங்கள் ரசிகர்கள், நெருங்கியவர்கள் உங்களை அதிகமாக சோர்வடைய வைத்திருக்கிறோம். ஆனால், நீங்கள் எங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுத்தீர்கள். இது சரியானது இல்லை தான், ஆனால், எது செய்தாலும் அது தாமதமானது தான்.

நீங்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியான பறவையாக உண்மையான அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் உங்கள் கண்களில் கண்டு பறந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நான் மறுபிறப்பில் நம்பிக்கை வைத்ததில்லை. ஆனால், இப்போது அதை நம்புகிறேன். ஏனென்றால் அடுத்த பிறவியில் உங்களை நாங்கள் காண வேண்டும். அப்போது நாங்கள் திருத்தங்களைச் செய்து எங்களைத் தகுதியுள்ளகளாக மாற்றி உங்களுக்கு மரியாதை அளிக்கிறோம்.

தயவு செய்து ஒரு சந்தர்ப்பம் தாருங்கள், ஏனென்றால் நாங்கள் உங்களை உண்மையாக நேசிக்கிறோம். இது போல் இன்னும் தொடர ஆசைதான், ஆனால், கண்களில் வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

- ஆர்ஜிவி

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் பாடலுக்கு நடனமாடிய துல்கர் - ஸ்ருதிஅஜித் பாடலுக்கு நடனமாடிய துல்கர் - ... நாளை முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை நாளை முதல் புதுப் படங்கள் ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
01 மார், 2018 - 12:49 Report Abuse
Siva Rama Krishnanan பிரபலங்களின் மர்மமான வாழ்வு மாதிரியே மர்மமான இறப்பும் நிகழ்கிறது
Rate this:
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
01 மார், 2018 - 10:44 Report Abuse
Syed Syed ஒருவரின் மறைவுக்கு பிறகு குறைகள் கூறுவது அநாகரிகம்.
Rate this:
sam - Bangalore,இந்தியா
01 மார், 2018 - 09:47 Report Abuse
sam Even Arjun Kapoor's mom also had same pain, when she married Boney kapoor and he (Boney) never took care of Arjun's career growth (Earlier he mentioned in the interview). But now Arjun kapoor is leading actor in Bollywood by his own effort.
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
01 மார், 2018 - 09:21 Report Abuse
R.BALAMURUGESAN இப்போதாவது அமைதியாக இருக்கட்டும்... ஆனால் ஒன்று, எந்த குடும்பத்தையும் கெடுக்கும் பெண்ணும், தனது குடும்பத்தை தவிக்கவிட்டு இன்னொரு பெண்ணை தேடி ஓடும் எந்த ஆணும் அமைதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை... இதில் பெண்ணுக்கு உதாரணம் இந்த தேவி, ஆணுக்கு உதாரணம் போனி... நல்ல நடிகை என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை... மேலும், நம் இந்திய பெண்கள் நன்றாக குடிப்பார்கள் என்று துபாய் வரை பறைசாற்றி பெருமைப்படுத்திவிட்டு போயுள்ளார்...
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01 மார், 2018 - 07:54 Report Abuse
Srinivasan Kannaiya காலையில் இருந்து கஞ்சி குடிக்காமல்,,, நாள் முச்சூடும் வேர்வை வர உழைத்து விட்டு இரவில் மட்டும் கருவாடு குழம்புடன் உணவருந்தி விட்டு நடைபாதையில் தூங்கும் உழைப்பாளிக்கு இருக்கும் நிம்மிதி பணம் பதவி படைத்தவனுக்கு இருக்காது...இது இயல்பு....
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in