ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்ச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத டிராபிக் ராமசாமி என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை டிராபிக் ராமசாமி என்கிற பெயரில் திரைப்படமாகி வருகிறது. டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். புதியவர் விக்கி இயக்குகிறார். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.
இந்தப்படத்தில், பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் அரசியலில் இரு துருவங்களில் இயங்கி வந்த சீமானும், குஷ்புவும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் ஆண்டனியும் சிறப்பு தோற்றத்தில், அநீதிகளைத் தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு நடிகராகவே நடிக்கிறார்.