Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளம் பாக்கி, ஆதாரம் உள்ளது : கவுதமி

27 பிப், 2018 - 14:12 IST
எழுத்தின் அளவு:
I-speaking-with-proof-says-Gauthami

காரணமின்றி, ஆதாரமின்றி நான் பேசும் பழக்கம் உடையவள் அல்ல என நடிகை கவுதமி கூறியுள்ளார்.

நடிகை கவுதமி, கமலை விட்டு பிரிந்து வந்துவிட்டார். சில தினங்களுக்கு முன்னர், கமல் உடன் நான் மீண்டும் இணைய மாட்டேன் என்றும், அவர் தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இவ்வளவு காலம் கவுதமி ஏன் அமைதியாக இருந்தார் என்பது போன்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. மேலும் ஆதாரமின்றி கவுதமி பேசுகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கவுதமி பதில் அளித்துள்ளார். கவுதமி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...

நான் கடந்தமுறை எழுதிய கடிதத்தின் உண்மை தெரியாமல் பலரும் முன் வைத்த விமர்சனம் காயப்படுத்துகிறது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நான் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்கவில்லை. கமல்ஹாசன் உடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் வேலை பார்த்த படங்களுக்கான சம்பளத்தை தான் எதிர்பார்க்கிறேன்.

நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தாயாக என் மகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கி தர ஆக்கப்பூர்வமான செயல்களில் இறங்க விரும்புகிறேன். இந்த உலகத்தில் கண்ணியமான சிறந்த மனிதர்கள் உள்ளனர். அவர்களோடு இணைந்து பணியாற்ற உள்ளேன்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மோசமான, சந்தோஷமற்ற சூழல் வரத் தான் செய்யும், அதிலிருந்து விடுபட்டு நேர்மறையான எண்ணத்தோடு பயணிக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக என் வாழ்க்கையில் பல ஏற்ற - இறக்கங்களை சந்தித்து உள்ளேன். என்னை சார்ந்த மனிதர்களுக்கு உழைப்பதில் மகிழ்ச்சி, அதற்கான பிறரின் சான்று தேவையில்லை. கடினமான காலக்கட்டத்தில் என்னோடு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

என்னைப்பற்றி 30 ஆண்டுகள் தெரிந்தவர்கள் நீங்கள், தேவையற்ற வார்த்தைகளை ஒருபோதும் நான் கொட்டியது கிடையாது. நான் ஒருவரைப்பற்றி பேசுகிறேன் என்றால் அதற்கான காரணமும், ஆதாரமும் இன்றி பேச மாட்டேன். நான் ஆதாரத்துடன் தான் பேசுகிறேன்.

இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in