ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அறிமுக நடிகர் வெற்றி கதாநாயகனாக நடிக்க, முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த படம் '8 தோட்டாக்கள்'. கிரைம் த்ரில்லர் படமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது.
இந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் அடுத்து இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படமும் கிரைம் த்ரில்லர் படம். 8 தோட்டாக்கள் படத்தை தயாரித்த 'பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.