டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விமல் சொந்தமாக தயாரித்து நடித்த படம் மன்னர் வகையறா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்டநாள் தயாரிப்பில் இருந்தது. ஒரு வழியாக வெளியிட முயற்சித்தபோது விமல் நடித்த ஜன்னல் ஓரம் படத்திற்கு நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் பிரச்னை செய்தார்கள்.
ஜன்னல் ஓரம் படம் வெளியிட முடியாமல் இருந்தபோது விமல் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்ததோடு விநியோகஸ்தர்களுக்கு உத்தரவாதமும் அளித்திருந்தார். அது மன்னர் வகையறா பட வெளியீட்டில் பிரச்னை ஆனது. அந்த நேரத்தில் விமலுக்கு பணம் கொடுத்து மன்னர் வகையறா வெளிவர உதவி செய்தவர் சிங்காரவேலன்.
விமல் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் கன்னிராசி படத்தையும் சிங்காரவேலன் வாங்கி வெளியிடுகிறார். இனி விமல் நடிக்கும் அனேக படங்களை சிங்காரவேலன் வெளியிடுவார் என விமல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.