தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை. பல ஏரியாக்களில் நஷ்டத்தை தந்தது. இந்நிலையில் மீண்டும் சிவாவின் இயக்கத்திலேயே நடிக்கிறார் அஜித்.
இருவரும் இணையும் நான்காவது படமான 'விசுவாசம்' படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது.
'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் துவங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
விசுவாசம் படத்தின் ஸ்கிரிப்ட் 100 சதவிகிதம் முடிவடைந்த பிறகே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன். அதனாலேயே விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது.