'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தமிழ்த் திரையுலகில் வெளிவந்த போலீஸ் படங்களிலேயே மூன்று பாகங்களாக வந்த ஒரே படம் சூர்யா நடித்த 'சிங்கம்'. சிங்கம், சிங்கம் 2, எஸ் 3 என தொடர்ந்து வெளிவந்த இந்த மூன்று பாகங்களையும் இயக்கியவர் ஹரி. இந்த மூன்று பாகங்களில் இரண்டு பாகங்கள் ரோகித் ஷெட்டி இயக்க ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டன. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கிய ரோகித் ஷெட்டியை தமிழ் ரசிகர்களும் அறிவார்கள்.
ரோகித் ஷெட்டியின் ரோகித் ஷெட்டி பிக்சர்ஸ், ரிரையன்ஸ் அனிமேஷன், டிஸ்கவரி கிட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தற்போது 'சிங்கம்' படத்தைத் தழுவி 'லிட்டில் சிங்கம்' என்ற அனிமேஷன் தொடர் ஒன்றை உருவாக்கியுள்ளன. கோடை விடுமுறையில் ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தொடர் குழந்தைகளுக்காக டிஸ்கவரி கிட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
'சிங்கம்' படத்தின் புகழ் ஏற்கனெவே சிறுவர்களை சென்றடைந்த ஒன்று. இப்போது அனிமேஷன் வடிவிலும் மீண்டும் அவர்களைக் கவர உள்ளது.
லிட்டில் சிங்கம் - டிரைலர்... https://youtu.be/X-y8CDwa2yo