ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் - 'நரகாசூரன்'. இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
நரகாசூரன் படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் 'நாடகமேடை'. இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் ஜெயராம் உடைய மகன் காளிதாஸ் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தில் நடித்த காளிதாஸ் அப்படத்தை தொடர்ந்து காளிதாஸ் நடிப்பில் 'ஒரு பக்க கதை' வெளியாகவிருக்கிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநரான பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு பைனான்ஸ் பிரச்சனையினால் முடங்கிக் கிடக்கிறது.