தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல்ஹாசன், தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அரசியல் பயணத்தை நாளை துவங்க உள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கமல், நாளை மாலை மதுரையில் நடக்கும் மாநாட்டில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை அறிமுகம் செய்கிறார்.
இந்நிலையில் கமலின் அரசியல் வருகையை பற்றி பாடல் ஒன்று இணையதளங்களில் வைரலாகி உள்ளது. "வா ராசா வா ராசா கமலஹாசா, உன்னை வாழ்த்த வந்தோம் வரவேற்போம் ஐலேசா... பேராச இல்லாத தரும ராசா, தமிழ்நாட்டை ஆள பொறந்தவரே மவ ராசா...." என்று இந்தப்பாடல் உள்ளது.
செங்கதிர்வாணன் என்பவர் பாடல்வரிகள் எழுத, கண்மணிராஜா இசையில், திவ்யாநாயர் என்பவர் பாடியிருக்கிறார். கமல் தரப்பில் இந்தப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, ரசிகர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்தப்பாடலை கமல் ரசிகர்கள் அதிகளவில் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.