‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்க ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதியே இப்படம் வெளியானது. முதல் சில நாட்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவ்வாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், அதன் பிறகு பரவிய நெகட்டிவ்வான கருத்துக்களால் படம் பெரிய வசூலை ஈட்டும் படமாக 'டேக்-ஆப்' ஆகவில்லை.
இப்படத்தின் வசூலைப் பற்றி எழுதினாலே படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபித்துக் கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார். ஒரு இயக்குனர் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளரின் பாக்கெட்டை வசூல் மூலம் பணமாக நிறைவு செய்தால் மட்டுமே அவர் வெற்றிகரமான இயக்குனர். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களையே நடுரோட்டில் தவிக்க வைத்த சிலர் இங்கு இருக்கிறார்கள். ஏன், விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரௌடிதான்' படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் கேட்டாலே விக்னேஷ் சிவனைப் பற்றி சொல்வாரே...?.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் உலக அளவிலான தியேட்டர் உரிமை சுமார் 60 கோடி வரை விற்கப்பட்டுள்ளது. ஆனால், படம் தியேட்டர்கள் மூலம் 45 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அதனால் தியேட்டர் வசூலைப் பொறுத்தவரையில் படத்திற்கு 15 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் மொத்தமாக ரூ.100 கோடி வசூலைக் கூட இந்தப் படம் தாண்டவில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி வரை வசூலாகியுள்ளது. தெலுங்கு, மலையாளத்திலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஏமாற்றிவிட்டது என்கிறார்கள்.
ஒரு ரீமேக் படத்தையே இந்த அளவிற்கு மோசமாக எடுத்துக் கொடுத்து விட்டாரே விக்னேஷ் சிவன் என்ற பேச்சும் கோலிவுட்டில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.