தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாகவே கம்யூனிஸ்டுகளுக்கு சினிமாவை பிடிக்காது. அது கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்பார்கள். இப்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவரான ஜி.மகேந்திரனின் மகன் புகழ் சினிமாவில் நடிக்கிறார். மு.களஞ்சியம் இயக்கும் முந்திரிக்காடு படத்தில் அவர்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக சுபபிரியா என்ற புதுமுகம் நடிக்கிறார். ஏ.கே.பிரியன் இசை அமைக்கிறார், ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் களஞ்சியம் கூறியதாவது:
வறுமையும், வன்முறையும் நிறைந்த பகுதியாக இப்போதும் இருக்கிறது முந்திரிக்காடு பகுதி. அதில் ஆணவக்கொலை பற்றிய பதிவாக இந்த படம் இருக்கும். சமரசத்திற்கு இடமின்றி யதார்த்தமான பதிவு இது. கதைக்கேற்ற முகங்களை தேடியதில் கிடைத்தவர்கள் தான் புகழும், சுபபிரியாவும். இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை பள்ளியில் படித்த ஏ.கே.பிரியன் என்ற 17வயது இளைஞன் இசை அமைக்கிறார் என்றார்.