வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ராம்கோபால் வர்மா பாராட்டி விட்டாரா என்று தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் மிகவும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். வெளியாகும் படங்களைப் பற்றியும், நடிகர்களைப் பற்றியும், அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கமெண்ட்டுகளை அடிப்பவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா.
அவர் ஆச்சரியப்படும் வகையில் ராம் சரண் தேஜா, சமந்தா நடிக்கும் 'ரங்கஸ்தலம்' படத்தின் டிரைலரையும், ஒரு பாடலையும் பாராட்டியுள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற 'என்த சக்ககுன்னாவே...' பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. அதற்கள் 40 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த பாடலையும் ராம் கோபால் வர்மா பாராட்டியுள்ளார்.
“ரங்கஸ்தலம்' டிரைலரை முழுமையாக ரசித்தேன். இருந்தாலும் இந்தப் பாடல் வேறு ஒரு கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த தேவிஸ்ரீபிரசாத் ஆகியோருக்கு மில்லியன் பாராட்டுக்கள்” எனப் பாராட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.