'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியூட்ரிஷியன் டாக்டராக இருக்கிறார். நித்யா சினிமாவில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தது. அதனை மறுத்து திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நான் கடந்த 7 வருடமாக நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறேன். இது தொடர்பான கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகிறேன். தற்போது நியூட்ரிஷியன் துறையில் ஆய்வு படிப்பு மேற்கொண்டிருக்கிறேன். நான் நிறைய சினிமா பார்ப்பேன். சினிமாவில் நல்ல ஆர்வம் உண்டு. எனது துறை பற்றி நான் சில டாக்குமெண்டரி படங்களும் எடுத்திருக்கிறேன். ஆனால் சினிமாவில் நடிக்கும் ஆசை என்றைக்கும் இருந்ததில்லை. நான் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. நான் தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் கவனம் செலுத்தவே முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் திவ்யா.