Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்று என்ன நடந்தது? அமலாபால் விளக்கம்

13 பிப், 2018 - 09:58 IST
எழுத்தின் அளவு:
What-happend-on-that-day?---Amalapaul-replied

நடிகை அமலாபால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கு நடந்து வருகிறது.

இதில் அவருக்கு உடந்தையாக இருந்து மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்படும் அன்று என்ன நடந்து என்ன என்பது பற்றி அமலாபால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜனவரி 31ஆம் தேதி சென்னையின் ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நான் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஒருவர் (தொழிலதிபர் அழகேசன்) என்னை அணுகி, நடன நிகழ்ச்சியை பற்றி ஒரு சில முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறினார். மலேசியாவில் விழாவுக்கு பிறகு அவருடன் இரவு உணவில் கலந்து கொள்ள அழைத்தார். அப்படி என்ன விஷேசமான டின்னர் என நான் அவரை கேட்டபோது, அவர் அலட்சியமாக "உனக்கு தெரியாதா?" என்ற பாணியில் பேசினார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எங்களை சுற்றி யாரும் இல்லாததால் நான் கலவரமானேன். அந்த மனிதர் ஸ்டுடியோவுக்கு வெளியில் போய், என்னுடைய நல்ல முடிவுக்காக காத்திருப்பதாக சொன்னார். நான் என் நலம் விரும்பிகள், வேலையாட்களை என்னை மீட்க அழைத்தேன். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் ஆனது. அந்த மனிதரோ அவரின் வழக்கமான தொழில் பேரத்தை பேசுவதை போல, சாதாரணமாக ஸ்டுடியோவுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்.

என்னுடைய ஆட்கள் அவரை நோக்கி போன போது, அவர் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க, "அவளுக்கு விருப்பமில்லைனா இல்லைன்னு சொல்லலாமே" இது என்ன பெரிய விஷயமா?" என்றார். எங்கள் குழுவினரை தள்ளி விட்டு, தப்பி ஓட முயன்றவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இந்த விஷயங்கள் நடந்து கொண்டிருந்த போது தான், அவர் திட்டமிட்டு செக்ஸ் மோசடி செய்யும் நபர் என்பதை உணர்ந்தேன். அவரின் செல்போனில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், மற்றும் அந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகளுடைய விபரங்கள் அனைத்தும் இருந்தன.

பின்னர் அவரை தி நகர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நானும் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றேன். இந்த பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டியதோடு, இந்த மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட இரண்டு பேரையும் கைது செய்திருக்கிறார்கள்.

சந்தேகத்தின் பிடியில் இருக்கும் இன்னும் சில பேரை கைது செய்ய பிடிவாரண்டுகளும் தயார் நிலையில் உள்ளன. அதோடு, அவர்களது விசாரணையை மேலும் துரிதப்படுத்தி, இந்த மோசடியில் யாரெல்லாம் உடந்தை என்பதையும் வெளிக்கொண்டு வர வேண்டுகிறேன்.

ஆனால் ஒரு சிலர் நடந்தது என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளாமலேயே, என்னை பற்றியும், என் மேனேஜரை பற்றியும் தவறான செய்தியை பரப்புகிறார்கள். விசாரணை நடந்து வருகிறது, அதற்கு தடையாக இருக்க கூடாது என்பதாலேயே நான் அமைதி காத்து வருகிறேன். மேலும் தவறான செய்திகளை பரப்பினால் அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்.

இந்த அறிக்கை கூட, சென்னை காவல் துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் பிரதீப் குமார் மீதோ எந்த தவறும் இல்லை என்பதை அறிவிப்பதற்காக தான் வெளியிடுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அமலாபால் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர்சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் தெலுங்கு படம் ரிச்சர்டுக்கு கைகொடுக்குமா? தெலுங்கு படம் ரிச்சர்டுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Sitaramen Varadarajan - chennai,இந்தியா
27 ஜூலை, 2018 - 10:35 Report Abuse
Sitaramen Varadarajan mahaa uththami .....nambungappaa ellaarum
Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
17 ஜூலை, 2018 - 20:26 Report Abuse
tamilvanan இவருக்கு விருப்பம் இல்லை என்றால் முடியாது என்று மறுத்து விட வேண்டியது தானே. தொழில் அதிபர் வேறு ஒன்றும் செய்ததாக தகவல் இல்லையே. எல்லா ஆண்களுக்கும் இந்த விஷயத்தில் சபலம் இருக்கத்தான் செய்கிறது. பெண் மறுத்து விட்டாலும் பலத்தகாரம் செய்வதே குற்றம். அழைப்பது எப்படி குற்றம் ஆகும்? புரியவில்லை அய்யா.
Rate this:
m.senthil kumar - tamilnadu,இந்தியா
17 ஜூலை, 2018 - 12:25 Report Abuse
m.senthil kumar அமலாபால் வளர்ந்து வரும் ஒரு நல்ல நடிகை, இரண்டாவது பாலியல் தொழில் செய்ய வேண்டிய அவசியமில்லை. அமலாபால் செய்த தவறு திருமணம் செய்து விவாகரத்து ஆனதுதான். அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பாலியல் தொழிலுக்கு இழுக்கின்றனர். அமலா நீங்கள் இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்கள் அப்பொழுதுதான் இதற்க்கு நிரந்திர தீர்வு. உங்களிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு அவர் வேறொரு திருமணம் செய்துகொண்டார் அல்லவா. ( அமலா நீங்கள் ஏன் திருமணம் செய்தீர்கள் அதுதான் தவறு ).
Rate this:
anand - Chennai,இந்தியா
17 ஜூலை, 2018 - 09:56 Report Abuse
anand நம்பிட்டேன் மேடம்..
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
13 பிப், 2018 - 19:17 Report Abuse
S Ramkumar விஜயை கேளுங்க சார்.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in