Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலகலப்பு 2, சுந்தர் சி சம்பளம் 10 கோடி ?

11 பிப், 2018 - 14:00 IST
எழுத்தின் அளவு:
did-sundar-c-gets-10-cr-salary-for-kalakalappu-2

தமிழ்த் திரையுலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனராக அறிமுகமானவர்களில் இன்னமும் தொடர்ந்து படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே இயக்குனர் சுந்தர் .சி மட்டுமே. எப்படி இத்தனை வருடங்களாக உங்களால் மட்டும் படங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்க முடிகிறது என்று ஒரு முறை அவரிடம் கேட்ட போது, 'காலத்திற்கேற்றபடி நம்மை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அந்த 'அப்டேட்' என்ன என்பது அவருடைய படங்களைப் பார்த்தாலே தெரியும்.

இசையமைப்பாளர், நடிகர்கள் என அந்தந்த காலகட்டத்தில் யார் டிரென்டிங்கில் இருக்கிறார்களோ அவர்களை வைத்தே படங்களை இயக்குவார். கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, சதீஷ், ரோபோ சங்கர் என நகைச்சுவை நடிகர்களைப் பார்த்தாலே அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.


'கலகலப்பு 2' படம் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் பொழுது போக்கு படமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இந்தப் படத்தை விளம்பர செலவு உட்பட சுமார் 8 கோடிக்குள் முடித்துக் கொடுத்துவிட்டாராம் இயக்குனர் சுந்தர் .சி. அதில் அவருடைய சம்பளம் 10 கோடியைச் சேர்க்கவில்லை என்கிறார்கள். படத்தின் தமிழ்நாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகிய இரண்டும் சேர்ந்து 15 கோடி வரை விற்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
குதிரை ஏறிய சன்னி லியோன்குதிரை ஏறிய சன்னி லியோன் காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ? காலா ரிலீஸ் திடீர் அறிவிப்பு, சரியா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்
13 பிப், 2018 - 08:03 Report Abuse
சுரேஷ் குமார். 20 வருடம் முன்பு, அதாவது இவருக்கு முன்பே அறிமுகமாகி இன்னும் உச்சத்தில் இருக்கும் இயக்குனர் ஷங்கர் ஐ விடவா இவர் பெரிய இயக்குனர்..சும்மா எழுதணும்னு எதையாவது கிறுக்காதீங்க...
Rate this:
Kunar -  ( Posted via: Dinamalar Android App )
12 பிப், 2018 - 00:04 Report Abuse
Kunar Salary is in cores. But cheated velmurugan by not giving some lakhs. Might have been sustained in industry for 20 years, might have earned 200 crores, but didnt win his associate hearts.
Rate this:
jagan -  ( Posted via: Dinamalar Android App )
11 பிப், 2018 - 15:30 Report Abuse
jagan sundar c ku salary 10.cr ah...avan than producer intha padathuku...wife kushboo than production company ku md...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in