தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அகடம் என்ற படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தவர் இசாக். அவர் இப்போது இயக்கி உள்ள படம் நாகேஷ் திரையரங்கம். ஆரி, ஆஷ்னா ஜவேரி, காளி வெங்கட், மனோபாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஸ்ரீ இசை அமைத்திருக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வருகிற 16ந் தேதி படம் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் இசாக் கூறியதாவது:
இது ஒரு காமெடி பேய் படம். இந்த பாணியில் நிறைய படங்கள் வந்துவிட்டதே என்று தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் வித்தியாசமான கதை. ஒரு தியேட்டருக்குள் பேய் புகுந்தால் என்ன ஆகும் என்கிற கதை. தியேட்டருக்குள் ஏன் பேய் போனது. அதன் நோக்கம் என்ன என்பதை சிரிக்க வைத்தும், கொஞ்சம் பயமுறுத்தியும் சொல்கிற படம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு படம் தணிக்கை செய்யப்பட்டது. 19 இடங்களில் வரும் ஷாட்கள், வசனங்களுக்கு தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தது. அதை நீக்க ஒப்புக் கொண்டோம். படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். வித்தியாசமான பேய் அனுபவத்தை படம் கொடுக்கும் என்கிறார் இசாக்.