பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் பலர் நடிக்க, கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 1700 கோடி வரை வசூலித்துள்ள படம் 'பாகுபலி 2'. இப்படத்தை ஆறு வாரங்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டில் வெளியிட்டுள்ளனர். இன்னமும் அங்கு சில தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் இதுவரை 5,50,000 யுஎஸ் டாலர் வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாக 'பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட மிகவும் குறைந்த வசூல்தான் என்கிறார்கள்.
ஜப்பான் நாட்டில் பல வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், மீனா நடித்து வெளியான 'முத்து' திரைப்படம் வசூலித்த தொகையை விட இது மிகவும் குறைவு. 'முத்து' படம் சுமார் 15,00,000 யுஎஸ்டாலர் வசூலித்துள்ளது என்கிறார்கள். இது அப்போதைய பண மதிப்பு. அந்தக் காலத்திலேயே 'முத்து' படம் ஜப்பான் நாட்டில் ஒரு தியேட்டரில் மட்டும் 22 வாரங்கள் ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
பல கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட 'பாகுபலி 2' படத்தை சமூக வலைத்தளங்களில் பல ஜப்பானியர்கள் பாராட்டி வருகின்றனர். இருந்தாலும் படத்தின் வசூல் 'முத்து' படத்தின் வசூலில் பாதியைக் கூடத் தொட முடியாதது ஆச்சரியமாக உள்ளது.