‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
2001ம் ஆண்டு வெளிவந்த இஷ்டம் தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் 2003ம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு மழை படம் மூலம் ஹீரோயினாக நடித்தார்.
ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007ல் வெளிவந்த சிவாஜி படம் மூலம் தமிழில் நம்பர் 1 நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியது அவருக்கு நெகட்டிவ்வாக அமைந்தது. அவர் நடித்து பின்னர் வெளிவந்த படங்களும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் யாரும் ஸ்ரேயாவை அவர்களது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் தமிழ்ப் படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது.
இருந்தாலும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்துள்ள தெலுங்குப் படமான காயத்ரி விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக நடித்துள்ள நரகாசூரன் படமும் வர உள்ளது.
இதனிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ஸ்ரேயா தற்போது அவரது வருங்கால கணவர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளாராம். நடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டதால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக ஸ்ரேயா விரும்புகிறார் என்கிறார்கள்.