'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், கடந்த 2012ம் ஆண்டு செகண்ட் ஷோ படத்தின் மூல் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இரண்டாவது படமான உஸ்தாத் ஒட்டல் பெரிய வெற்றி பெற்றது.
தமிழில் வாய் மூடி பேசவும், ஓகே கண்மணி, சோலோ படங்களில் நடித்தார். 6 ஆண்டுகளில் 24 படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானின் 25வது படம் அவர் தமிழில் நடித்து வெளிவர இருக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தை பிரான்சிஸ் தயாரிக்கிறார், துல்கர் ஜோடியாக ரித்துவர்மா நடிக்கிறார். இமான் இசை அமைத்துள்ளார். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது ரொமாண்டிக் காதல் படம். படத்தின் லோகோவை இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் வெளியிட்டார், படத்தின் பர்ஸ்ட் லுக்கை காதலர் தினமான பிப்ரவரி 14ந் தேதி வெளியிடுகிறார்கள். துல்கர் சல்மானின் 25வது படமாக தமிழ் படம் அமைந்திருப்பதால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டீம் அதனை துல்கருடன் கொண்டாடி மகிழ்ந்தது.