தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் கடந்த 2௦16ல் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என்கிற படம் நூறு நாட்கள் ஓடியது. இந்தப்படத்தை திலீப்பின் நண்பரான நாதிர்ஷா என்பவர் தான் இயக்கியிருந்தார். தற்போது, தமிழில் அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
மலையாளத்தில் இயக்கிய நாதிர்ஷாவே தமிழிலும் இயக்குகிறார். தனியார் தொலைக்காட்சியில் பிராங்க் கால் மூலம் பிரபலங்கள் பலரையும் கலாய்க்கும் தீனா என்பவர் தான் ஹீரோவாக நடிக்கிறார். தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை தயாரிக்கிறார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது.
அடிக்கடி மலையாள படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டாலும், நீண்ட நாளைக்குப்பிறகு, மலையாளத்தில் ஹிட் கொடுத்த இயக்குனரே அந்தப்படத்தை தமிழிலும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.