சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
மதுரையில் பிப்ரவரி 21 ம் தேதி மாலை கமல் துவங்க உள்ள அரசியல் கட்சியின் முதல் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாக கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு அறிவித்துள்ளார்.
கமல் நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் இன்று (பிப்.,4) நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தங்கவேலு, கமல் தனது நாளை நமதே பயணத்தில் பிப்ரவரி 21 ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து துவக்க உள்ளார். அன்றைய தினம் மாலை மதுரையில் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது வழக்கமான அரசியல் பொதுக் கூட்டம் போல் இருக்காது என கமல் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதனால் அனைத்து நற்பணி இயக்க தொண்டர்களும் இதில் கலந்து கொள்வதுடன் பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொள்ளும் வகையில் பொதுக் கூட்டம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.