பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாரதிராஜா இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த 'புதுமைப் பெண்' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர். அதன் பின் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர். அவர் தெலுங்கில் நடித்த 'அங்குசம்' படம் தமிழில் 'இதுதான்டா போலீஸ்' என டப்பிங் ஆகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அவரது காதல் மனைவி நடிகை ஜீவிதா. இவரும் 'உறவைக் காத்த கிளி' தமிழ்ப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவர்களது மகள் ஷிவானி டாக்டருக்குப் படித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாகவே திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். அதற்காக போட்டோஷுட் ஒன்றையும் நடத்தி அவருடைய புகைப்படங்கள் பல முன்னணி இயக்குனர்களின் பார்வைகளுக்கு அனுப்பப்பட்டது. இப்போதுதான் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதைத் தொடர்ந்து தமிழிலும் அறிமுகமாக உள்ளார். விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்க உள்ள புதிய படத்தில் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகப் போகிறார். இப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகர் கிருஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாக உள்ளது.
ஷிவானியை தன் படத்தில் ஜோடியாக அறிமுகப்படுத்த உள்ள நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் “விஷ்ணு விஷாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ள ஷிவானி ராஜசேகரை வரவேற்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.