ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 10 ஆண்டுகளில் தமிழில் வெளியான படங்களில் முக்கியமான படமாகக் கருதப்படும் படம் தியாகராஜன் குமார ராஜா இயக்கிய ஆரண்யகாண்டம். இந்தப்' படம் வெளியாகி பல வருடங்களான நிலையில் தியாகராஜன் குமார ராஜா தனது அடுத்தப்படத்தை இயக்கவில்லை.
இந்நிலையில் தற்போது தியாகராஜன் குமார ராஜா இரண்டாவது படமாக 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில விஜய்சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் 'டப்ஸ்மாஷ்' மூலம் புகழடைந்த பெங்களூரை சேர்ந்த மிருணாளினியும் நடிக்கிறார்.
ஏற்கெனவே தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி நடித்துள்ள மிருணாளினி 'நகல்' என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான வேடத்தை சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏற்றிருக்கிறாராம் மிருணாளினி. 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.