Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேரடி அரசியலில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின்

28 ஜன, 2018 - 15:03 IST
எழுத்தின் அளவு:
udhayanithi-enter-into-politics

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், தற்போதைய செயல் தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ஒரு தயாரிப்பாளராக சினிமாவுக்குள் வந்தார். அவர் சினிமாவிற்குள் வரும்போதே கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார், அதன் பிறகு அந்த செல்வாக்கை வைத்துக் கொண்டு அரசியலுக்குள் செல்வார் என்று கணித்தார்கள். அதன் படியே நடந்தது. பெரிய நடிகர்களை வைத்து பெரிய படங்களை எடுத்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என் மனசு தங்கம், நிமிர் படங்களில் நடித்தார். இந்த படங்களில் அவர் தன்னை பெரிய ஆக்ஷன் ஹீரோவாக காட்டிக்கொள்ளாமல் நெக்ஸ்ட் டோர் பாய் இமேஜை தக்க வைத்துக் கொண்டார்.

சினிமா தயாரிக்கும்போதும், நடிக்கும்போதும் அரசியல் பற்றி எதுவும் பேசாத உதயநிதி, சமீபகாலமாக அரசியல் கருத்துக்களை பேச ஆரம்பித்திருக்கிறார். அதோடு திமுக பிரமுகர்களும் மேடைகளில் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிதான் கழகத்தை காக்க இருக்கிறவர் என்கிற தோணியில் பேச ஆரம்பித்தார்கள்.


இப்போது இதன் அடுத்த கட்டமாக உதயநிதி நேரடி அரசியலில் நேற்று குதித்தார். சென்னையில் திமுக சார்பில் நடந்த பஸ்கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது "இனி திமுக நடத்தும் அனைத்தும் போராட்டங்களிலும் கலந்து கொள்வேன். அரசியலில் தீவிர பணியாற்றுவேன்" என்றார்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
படம் மேல் படம் 'புக்' செய்யும் விஜய் சேதுபதிபடம் மேல் படம் 'புக்' செய்யும் ... வரிஏய்ப்பு வழக்கு : அமலா பால் கைது வரிஏய்ப்பு வழக்கு : அமலா பால் கைது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Arun -  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2018 - 13:46 Report Abuse
Arun arasiyalikku varana, lossu paya!
Rate this:
29 ஜன, 2018 - 10:55 Report Abuse
கதைசொல்லி என் மகன் எப்பொழுதும் அரசியலுக்கு வரவே மாட்டார் என்று சத்தியம் வழுவாத தலைவர் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி அளித்து ஒரு ஆண்டு கூட நிறைவடையவில்லை.
Rate this:
deepak - chennai,இந்தியா
29 ஜன, 2018 - 10:10 Report Abuse
deepak இதை சினிமா செய்திகளில் போட்ட தினமலருக்கு நன்றி
Rate this:
TamilReader - Dindigul,இந்தியா
29 ஜன, 2018 - 06:00 Report Abuse
TamilReader If DMK really interested to win the election and serve for TN people , then they have to keep away with their dirty family பாலிடிக்ஸ் Otherwise this party will die very soon
Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
29 ஜன, 2018 - 02:36 Report Abuse
என்னுயிர்தமிழகமே அடுத்து தமிழக மக்களுக்கு உதயநிதி வழங்கும் பிரமாண்ட காவியம் திரைக்கு வந்து சில நாட்களே ஆன என்ன கொடுமை சரவணா இது படம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in