பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
குல்ஷன் குமாரின் வாழ்க்கை படம் மொகுல் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் இருந்து நடிகர் அக்ஷய் குமார் வெளியேறி உள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. தயாரிப்பாளர்களும் அக்ஷய் குமாருக்கு பதிலாக இப்படத்தில் நடிக்க, அமீர் கானிடம் பேசி உள்ளார்களாம்.
இது பற்றி டி சீரிஸ் நிறுவன செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த செய்தி உண்மையில்லை. அக்ஷய் குமாருக்கு இப்படத்தில் மிக முக்கிய பங்கு உள்ளது. அவர் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அக்ஷய் குமார் நடித்துள்ள பத்மன் படம் வரும் பிப்ரவரி 9 ம் தேதி ரிலீசாக உள்ளது.