ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள குறும் படம் கடவுள் செக்ஸ் உண்மை. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார். அடல்ட் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானதில் இருந்தே அப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வந்தன. குறிப்பாக பெண் சமூக ஆர்வலர்கள், ஆபாச பட மெடுத்து சமூகத்தை கெடுக்கிறார் ராம்கோபால்வர்மா என்று அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், இப்படம் அடல்ட் ஒன்லி படமாக இருந்தபோதும் ஒவ்வொரு வரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறி வரும் ராம்கோபால் வர்மா, கடவுள் செக்ஸ் உண்மை படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவர் மீது தற்போது இன்னொரு சர்ச்சை எழுந்திருக்கிறது.
அதாவது, ஜெயக்குமார் என்ற எழுத்தாளர், ராம்கோபால் வர்மா இயக்கி வெளியிட்டுள்ள கடவுள் செக்ஸ் உண்மை படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கோரியுள்ளார். இவர் ராம்கோபால்வர்மாவிடம் உதவியாளராக பணியாற்றியவராம். அந்த சமயத்தில் அவர் ராம்கோபால் வர்மாவிடம் சொன்ன கதையை திருடித்தான் இப்போது படம் இயக்கி விட்டாராம். ஆனால் ஜெயக்குமார் கடவுள் செக்ஸ் உண்மை படத்தின் கதை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடியபோதும், அவரது குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
ஆக, சர்ச்சை படம் இயக்கி இப்போது கதை சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார் சர்ச்சை இயக்குனர் ராம்கோபால்வர்மா.