தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஒன்று, இவர் வில்லங்கமான படம் எடுப்பார், அல்லது வில்லங்கமான கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்துவார். அவருடைய தற்போதைய பரபரப்பு சன்னி லியோன் மாதிரி நீலப்பட நடிகையான மியா மல்கோவை வைத்து காட் செக்ஸ் ட்ரூத் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் படங்கள் சமீபத்தில் இணைய தளத்தில் வெளிவந்தது. இதில் முழு நிர்வாணமாக இருக்கும் மியா மல்கோவாவுக்கு ராம்கோபால் வர்மா நடிப்பு சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் இணையதளத்தில் வெளிட்டு அதன் முகவரியையும் வெளியிட்டார்.
தற்போது ராம்கோபால் வர்மாவுக்கும், மியா மல்கோவாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இருவர் மீதும் சமூக நல அமைப்புகள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. இந்திய கலாச்சாரத்தை கெடுத்து இளைஞர்களை நாசமாக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த புகாரை ஏற்றுக் கொண்ட போலீசிர் இருவர் மீதும் 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் ராம்கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது. இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.