பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா சைகல், சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் படப்பிடிப்பு முடிவு பெறுகிறது.
இந்தப் படத்தையடுத்து புதுமுக இயக்குநர் ராஜத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இவன் தந்திரன் உட்பட பல படங்களை இயக்கிய ஆர்.கண்ணனின் உதவியாளர் இவர். சூர்யா நடித்த சிங்கம் படத்தையும் தற்போது த்ரிஷா நடிக்கும் மோகினி படத்தையும் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் இந்தப்படத்தின் கதாநாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
கார்த்தி நடிக்கும் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதல் முறை.