ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
கடும் எதிர்ப்புக்கள், சர்ச்சைகள், போராட்டங்கள், கலவரங்களை கடந்து அறிவித்தபடி, நாடு முழுவதும் இன்று (ஜன.,25) பத்மாவத் படம் ரிலீஸ் ஆகி உள்ளது. நாடு முழுவதும் 4800 தியேட்டர்களில் பத்மாவத் படம் ரிலீசாகி உள்ளது.
இருப்பினும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் பத்மாவத் படத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும், கலவரங்களும் நடந்து வருகின்றன. இதனால் அந்த 4 மாநிலங்களில் மட்டும் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதே சமயம் உ.பி.,ல் பாதுகாப்பான முறையில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான்கு தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் உள்ள தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திட்டமிட்டபடி படம் திரையிடப்பட்டுள்ளது. குஜராத்தில் பத்மாவத் படம் 120 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் ராஜபுத்திர இனத்தவர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.