ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2018ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து அதிகப் படங்கள் வெளிவரும் சூழல் உருவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 30 படங்கள் வரை வெளியிட அந்தந்த தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்களாம். இதில் எந்தப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்துதான் படங்கள் வெளிவரும்.
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் 'கரு' படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சௌரியாக நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாராகியுள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிப்ரவரி 9ம் தேதியிலிருந்து 23ம் தேதிக்குத் தள்ளி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டியுள்ளதால், இரு மொழி நிலவரத்திற்கு ஏற்றபடி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.