பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி உடல்நலக்குறைவால் பெங்களூரில் இன்று(ஜன., 24) காலமானார். அவருக்கு வயது 85. இவர் நடிகை சவுகார் ஜானகியின் சகோதரி ஆவார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர் கிருஷ்ணகுமாரி. 1951-ம் ஆண்டு நவிதே நவரத்னலு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரும்பிப்பார், மனிதன், கற்கோட்டை, புதுயுகம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். 1960-70-களில் பிரபல நாயகியாக திகழ்ந்த கிருஷ்ண குமாரி, அன்றைய ஜாம்பவான் ஹீரோக்களான என்டி.ராமாராவ், அக்கினினேனி நாகேஸ்வரராவ், கிருஷ்ணம் ராஜூ, ராஜ்குமார், சிவாஜி உள்ளிட்டவர்களுடன் நடித்திருக்கிறார்.
கிருஷ்ணகுமாரியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.